News Just In

6/15/2023 10:05:00 AM

அனர்த்த இடர் முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு : அனர்த்தத்தை ஏற்படுத்தக்கூடிய மனித செயற்பாடுகளைத் தடுப்பது தொடர்பாகவும் ஆராய்வு !

அனர்த்த இடர் முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு 


நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அனர்த்த இடர் முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வொன்று நேற்று அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி. எம். றியாஸ் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை தென்கிழக்குப்பல்கலைக்கழக விரிவுரையாளர் ஐ.எல்.ஸாஹிர் வளவாளராகக் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக், உதவிப்பிரதேச செயலாளர் எம்.ஐ. முவஃபிகா, திட்டமிடல் உதவிப்பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீட் உட்பட கல்முனை சாய்ந்தமருது மற்றும் காரைதீவு ஆகிய பிரதேச செயலகங்களைச்சேர்ந்த திட்டமிடல் உதவிப்பணிப்பாளர்கள், கிராம நிருவாக உத்தியோகத்தர்கள், அனர்த்த முகாமைத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக சேவை உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கரையோரம் பேணல் உத்தியோகத்தர்கள், நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள், சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், காணி உத்தியோகத்தர்கள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், பள்ளிவாயல்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

கல்முனை சாய்ந்தமருது மற்றும் காரைதீவு ஆகிய பிரதேசங்களில் அனர்த்தத்தை ஏற்படுத்தக்கூடிய மனித செயற்பாடுகளைத் தடுப்பது தொடர்பாகவும் அனர்த்த நிலைமைகளின் போது மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கைகள் தொடர்பாகவும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது


No comments: