News Just In

5/26/2023 11:37:00 AM

இடமாற்றம் கோரி வடமாகாண ஆளுநருக்கு சென்ற ஆசிரியரின் கடிதம்!




யாழ்.ஒஸ்மானியா கல்லூரியில் ஆசிரியர் மீது மாணவன் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கல்லூரி ஆசிரியர்கள் வடமாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ் இற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை(24) ஒஸ்மானியா கல்லூரியில் பயிற்சி ஆசிரியரொருவர் மீது பாடசாலை மாணவன் ஒருவர் தாக்குதல் நடத்தியிருந்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதமும் குறித்த பாடசாலையில் மாணவனொருவனால் பிரச்சினை ஏற்பட்டு ஆசிரியரொருவர் மீது குறித்த மாணவனின் தந்தை தாக்குதல் மேற்கொண்டிருந்தார்.

சம்பவம் தொடர்பில் ஒஸ்மானியா கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் வடக்கு ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளனர். ஆளுநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,

யா/ஒஸ்மானியா கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களாகிய நாம் தினம் தினம் இப்பாடசாலையில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றோம். 24.05.2023 அன்று யாழ்.தேசியக் கல்வியற் கல்லூரியால் பயிற்சிக்காக வந்த ஆசிரியர் மீது தரம் 11 மாணவர்கள் தாக்குதலை ஏற்படுத்தி உள்ளனர்.

இவ்வாறு தாக்குதல் இடம்பெற்றுவது இரண்டாவது சம்பவமாகும். இவ்வாறு தொடர்ந்து ஆசிரியர்கள் மீது தாக்குதல்கள் இடம்பெறுவதனால் இப் பாடசாலையில் கடமையாற்றுவது அச்சுறுத்தலாகவே உள்ளது.

எனவே எமக்கு வேறு பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு இடமாற்றம் பெற்றுத் தராவிடின், உடல் ரீதியாக பாதிக்கப்படும் பட்சத்தில் நீங்களே பொறுப்புக் கூறுபவர்களாக கருதப்படுவீர்கள் என அந்த கடிதத்தில் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை மனித உரிமை ஆணைக்குழு, இலங்கை ஆசிரியர் சேவைச்சங்கம், இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம் ஆகியவற்றுக்கும் கடிதத்தின் பிரதி அனுப்பபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: