News Just In

5/03/2023 01:37:00 PM

ஏரிஎம் அட்டைக்குத் தட்டுப்பாடு!





-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கடந்த பல நாட்களாக அரச வங்கிகளில் புதிய ஏரிஎம் அட்டைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதால் புதிய ஏரிஎம் அட்டைகளைப் பெறமுடியவில்லை என அரச வங்கிகளின் வாடிக்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஏரிஎம் அட்டைகள் இல்லாத காரணத்தினால் பாரம்பரிய முறைப்படி வங்கிக்குச் சென்று வரிசையில் நின்று நேரடியாகவே பணத்தை மீளப் பெறவேண்டியுள்ளதாக வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் நேர விரயமும் அலைச்சலும் மன உளைச்சலும் ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

அரச வங்கிகளில் புதிய ஏரிஎம் அட்டைகளோ அல்லது காலாவதியான அட்டைகளுக்குப் பதிலான அட்டைகளோ இப்பொழுது பெற முடியாத நிலையுள்ளது

No comments: