News Just In

4/27/2023 07:45:00 AM

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் வௌியான உண்மை!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள சட்ட நிபுணர் குழுவின் சில சரத்துக்கள் மூலம் அடிப்படை உரிமைகள் மீறப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனை அந்தச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மார்ச் 22ஆம் திகதி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சட்ட நிபுணர்கள் அடங்கிய விசேட குழுவொன்றை இந்த சட்டத்தை ஆராய்வதற்காக நியமித்தது.

அதன்படி, சட்டமூலத்தின் 3, 4, 10, 11, 13, 14, 15, 16, 28, 30, 31, 36, 82, 83, 84, 85, மற்றும் 86 ஆகிய சரத்துக்களில் குற்றவியல் சட்டத்தின் கொள்கைகளை மீறுவதாகத் தெரியவந்துள்ளது.

அத்துடன், பேச்சு சுதந்திரம், ஒன்றுகூடல், சங்கம், தொழில் ஒன்றில் ஈடுபடுதல் மற்றும் நடமாடும் சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகள் அக்கட்டுரைகள் மூலம் மீறப்படுவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேலும் தெரிவிக்கிறது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட குழுவால் அவதானிக்கப்பட்டுள்ள குறித்த விடயங்கள் தொடர்பில் நீதி அமைச்சு மற்றும் ஏனைய அனைத்து தரப்பினருக்கும் விளக்கமளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த சட்டமூலத்திற்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் உரிய சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்படும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments: