News Just In

3/31/2023 09:28:00 AM

செயற்பாட்டு ரீதியான வாய்மொழி ஆங்கிலம் கல்முனை வலயத்தில் தொடங்கி வைப்பு!




நூருல் ஹுதா உமர்

நாடு தழுவிய ரீதியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற தரம் 01 மாணவர்களுக்கான செயற்பாட்டு ரீதியான வாய்மொழி ஆங்கிலம் (Activity Based Oral English) அங்குரார்ப்பண நிகழ்வு கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் எம்.சி. நஸ்லின் றிப்கா அன்சார் தலைமையில் நடைபெற்றது.

வலயத்தின் 65 பாடசாலைக்கும் பொதுவான ஒரு நிகழ்வாக இப் பாடசாலையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் கலந்து கொண்டார். மேலும் பிரதிக் கல்வி பணிப்பாளர்களான எம்.எச்.ஜாபிர், பீ .ஜிஹானா ஆலிப், எம்.எச். றியாஸா ஆகியோருடன் சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளரும், உதவிக்கல்வி பணிப்பாளருமான எம்.என். அப்துல் மலீக், உதவிக்கல்வி பணிப்பாளர் அஸ்மா மலிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கான நவீன வகுப்பறைகளில் மாணவர்களுக்கு செயற்பாட்டு அடிப்படையிலான ஆங்கில பாடம் கற்பித்தல் மாதிரி வகுப்பு திறந்து வைக்கப்பட்ட இந்நிகழ்வின் விஷேட அதிதிகளாக ஆசிரிய ஆலோசகர் ஏ.சஹரூன், பாடசாலை இணைப்பாளர் ஏ. றாஸிக், மற்றும் பாடசாலை பிரதி அதிபர், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


No comments: