மாளிகைக்காடு நிருபர்
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு லயன்ஸ் கிளப் அமைப்பினால் 3.5 மில்லியன் ரூபா பெறுமதியான Multi Parameter Monitors மற்றும் Oxygen Cylinders வழங்கும் நிகழ்வு வைத்தியசாலையில் இடம்பெற்றது.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஆசாத் கனீபா அவர்களினால் இணைப்புச் செய்யப்பட்ட இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல் எம் றிபாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் குறித்த நிகழ்வில் பங்கு பற்றிய பணிப்பாளர் அவர்கள் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை பிரிவு ஒன்றை ஆரம்பிப்பதற்கும் அதற்கான உபகரணங்களை பெறுவதற்கும் குறித்த நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்தமைக்கு அமைவாக இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதாக Lions Club நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
குறித்த கண் சத்திர சிகிச்சை நிலையத்தை ஆரம்பித்து மாதாந்த பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் சம்மாந்துறை பிரதேச மக்கள் மாத்திரம் இன்றி ஏனைய பிரதேச மக்களும் பயன் பெறுவார்கள் என்று பணிப்பாளர் இந்நிகழ்வில் உரையாற்றும்போது தெரிவித்திருந்தார். குறித்த நிகழ்வில் பணிப்பாளர் அவர்களுடன் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆசாத் ஹனீபா லயன்ஸ் கிளப் அமைப்பின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் சம்மாந்துறை கோல்டன் சிட்டி அமைப்பினர் திட்டமிடல் வைத்தியர் நியாஸ் அகமட் உள்ளிட்ட சுகாதார உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் பங்குபற்றினார்கள்
No comments: