News Just In

2/17/2023 10:10:00 AM

வாட்ஸ் அப் பயனாளர்களுக்கான செய்தி!





உலகம் முழுவதும் பல கோடி மக்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.தனது பயனாளர்களை தக்கவைத்துக்கொள்ள வாட்ஸ் அப் சார்பில் அவ்வப்போது பல புதிய புதுப்பித்தல்களை அறிமுகம்படுத்துவது வழக்கும்.இதற்கமைய உலக வாழ் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு புதிய புதுப்பித்தல் ஒன்றை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதன்படி,வாட்ஸ் அப் நிறுவனம் ஆண்ட்ராய்டு தொலைபேசிகளுக்கு நான்கு புதிய அப்டேட்டுக்களை வழங்கியுள்ளது.முதலாவதாக வாட்ஸ் அப் செயலிகள் மூலம் ஆவணங்கள் பகிரப்படும் போது அதற்கான குறிப்பிட்ட தலைப்புகளை பயனர்களால் சேர்க்க முடியும்.

ஒரே நேரத்தில் 100 புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வரை மற்றவர்களுக்கு பகிரலாம். இனி வரும் குழு அரட்டைகளில் இன்னும் நீண்ட விளக்கங்கள் அனுமதிக்கப்படும்.

தனிப்பயனாக்கப்பட்ட அவதார்களின் அறிமுகங்களை மக்கள் ஏற்கனவே பெற்று அதன் வேடிக்கையான புதிய அம்சங்களை பேசி வருகின்றனர்.

பொதுவாக வாட்ஸ்அப் நிறுவனம் அப்டேட்களை வெளியிடும் போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு என இருவருக்கும் இணைந்தவாறு புதிய அப்டேட்களை வெளியிடுவர்.

ஆனால் தற்போது வெளியாகியுள்ள இந்த புதிய அப்டேட்கள் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

ஐபோன் பயனர்கள் இந்த புதிய அப்டேட்டிற்காக சிறிது காலம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: