News Just In

2/15/2023 12:48:00 PM

ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாட்டில் இஸ்லாமாபாத் வித்தியாலயத்திற்கு நீர் இணைப்புத் தொகுதி..!




மாளிகைக்காடு நிருபர்

கல்முனை கமு/கமு/ இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தின் நீண்ட நாள் தேவையாக காணப்பட்ட நீர் இணைப்புத்தொகுதி ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாட்டிலும் இளம் முஸ்லிம் பெண்கள் அமைப்பின் அனுசரணையிலும் நிர்மாணிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை (14) பாடசாலையின் அதிபர் ஏ.ஜி.எம். றிஸாத் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாடசாலை ஸ்தாபகர் முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் மர்ஹும் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் புதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும் கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வரும் ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் கலந்து கொண்டார்.

இதில் பாடசாலையின் பிரதி அதிபர், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள், பெற்றார்கள், ஊர் நலன் விரும்பிகள் உட்பட இன்னும் பலரும் கலந்து சிறப்பித்தார்கள். அத்துடன் விசேட துஆ பிரார்த்தனை செய்யப்பட்டதுடன் மர நடுகையும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.


No comments: