நூருல் ஹுதா உமர்
இவ்வாண்டு 2022 (2023) வெளிவந்த புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின்படி கல்முனை கல்வி வலயத்தின் சாய்ந்தமருது கமு/கமு/லீடர் எம்.எச்.எம் அஸ்ரப் வித்தியாலயத்தில் 5 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது பாடசாலையின் வரலாற்றில் ஒரு வரலாற்றுச் சாதனையாகும் என பாடசாலை அதிபர் எம்.ஐ.சம்சுதீன் தெரிவித்தார். அத்தோடு ஏ.ஜி.முகம்மத் அஹ்னப் என்ற மாணவன் 178 புள்ளிகள் பெற்று சாய்ந்தமருது கோட்டத்தில் முதலாமிடம் பெற்றுள்ளதோடு கல்முனை வலய மட்டத்தில் இரண்டாமிடம் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடித் தந்ததுள்ளதாகவும் இம்மாணவர்களுக்கும் இவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் தமது வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக அதிபர் எம்.ஐ.சம்சுதீன் குறிப்பிட்டார்.
No comments: