தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்து வந்தவர் மயில்சாமி. இன்று காலை நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு கூட்டிச்செல்லும் வழியில் மரணமடைந்துள்ளார்.
அவரின் மறைவி சினிமா பிரபலங்களுக்கு சினிமா ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. நடிகர் மயில்சாமி, மறைந்த நடிகர் விவேக்கிற்கு மிகவும் நெருக்கமானவராகவும் அவருடன் பல படங்களில் இணைந்தும் பணியாற்றி இருக்கிறார்.
இந்நிலையில், தூள் படத்தில் விவேக், மயில்சாமியின் காட்சிகளை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் ஒரு மீம்ஸ்-ஐ பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள். சொர்க்கத்தில் விவேக் இருந்து கொண்டு, மயில்சாமியை கூப்பிடுவது போன்ற புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
No comments: