சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து சாதகமான பதில் கிடைத்தவுடன் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு பில்லியன் டொலர் கடன் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் தற்போது பச்சைக்கொடி காட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு மார்ச் மாதமளவில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனுதவி கிடைக்கும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் கோட்டபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை மாற்றுமாறு ஜனாதிபதிக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் அமைப்புகள் கோரியுள்ளன.
இந்நிலையில் விளையாட்டு, நெடுஞ்சாலைகள், போக்குவரத்து, ஊடகத்துறை, துறைமுகம், தொழில் அமைச்சு பதவியில் மாற்றம் ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
No comments: