தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நீதிமன்றம் வருகை தருமாறு கூறும் பொலிஸ் கட்டளையை நேற்று (14) பொலிஸார் வழங்கியிருந்தனர்.
நீதிமன்ற கட்டளை சிங்கள மொழியில் மாத்திரம் இருந்ததன் காரணமாக சிறீதரன் எம்.பி கட்டளையை ஏற்க மறுத்துள்ளார்.
சிங்கள மொழி தனக்கு வாசிக்கத் தெரியாது எனவும் ஆகவே, கட்டளையைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தமிழில் கொண்டு வந்து தருமாறு கூறி சிறீதரன் எம்.பி பொலிஸாரிடம் அதனை மீளக் கையளித்தார் அதன்பின்னர் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து கொண்டு வந்து கொடுத்தபோது,
நீதிமன்றத்துக்கு தன்னை வருவதற்கு அழைக்கும் அழைப்பை நீதிமன்றம் தான் வழங்கமுடியுமே தவிர, நீதிமன்றத்துக்கு அழைக்கும் அழைப்பை பொலிஸாரால் வழங்கமுடியுமா என நாடாளுமன்ற சிறீதரன் எம்.பி வினவிய போது, பொலிஸார் அமைதியாக இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
No comments: