News Just In

2/17/2023 09:59:00 AM

பொலிஸ் போக்குவரத்து அதிகாரியை திடீரென அறைந்த பெண்!





கடமையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரியை பெண் ஒருவர் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜாஎல பொலிஸ் போக்குவரத்து அதிகாரி ஒருவர், பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணை தடுத்து நிறுத்தியுள்ளார்.

இதன்போது, பொலிஸாருக்கு பயப்படாத பெண் நான் என்று கூறி தடுத்து நிறுத்திய கான்ஸ்டபிளின் காதில் அடித்துள்ளார்.

ஜாஎல பொலிஸ் போக்குவரத்து அதிகாரியின் காதில் குறித்த பெண் அடித்ததுடன் தனது மோட்டார் சைக்கிளையும் விட்டுச் சென்றதாக ஜாஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜாஎல பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.பெண் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த பெண் சீதுவ பிரதேசத்தில் வசிப்பவர் என்பதை அறிந்த பொலிஸார் அவரை தேடிச் சென்ற போது குறித்த பெண் நீண்ட நாட்களாக மனநல சிகிச்சை பெற்று வருவதாக வீட்டில் உள்ளவர்கள் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜாஎல பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: