நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஓட்டமாவடி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வு சுப நேரம் 08.23க்கு பிரதேச செயலக முன்றலில் ஆரம்பமானது.
பிரதேச செயலாளர் வீ.தவராஜா தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் பயன்தரும் மரக்கன்றுகள் நாட்டப்பட்டதுடன் பிரதேச செயலக வளாகமும் சிரமதானமும் இடம் பெற்றதுடன் ஊழியர்களுக்கு பாற்சோறும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எஸ்.எம்.அல் அமீன், பிரதி திட்ட பணிப்பாளர் எஸ்.ஏ.எம்.றியாஸ், கணக்காளர் எம்.சஜ்ஜாத், பதிவாளர் எம்.ஐ.மாஜிதீன், நிருவாக உத்தியேகத்தர் எஸ்.ஏ.ஹமீட் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
எஸ்.எம்.எம்.முர்ஷித்
No comments: