இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ்டித்து இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் தமிழருக்கு இருள் எனும் தொணிப் பொருளில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (04.02.2023) மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முன்னர் அனைவரும் அகிம்சை வழியில் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்பதற்கான ஒரு எடுத்துக்காட்டாக வெள்ளைத் தொப்பி அணிந்தவாரே இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்
மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து இவ் எதிர்ப்பு பேரணியானது கல்லடி பாலத்தில் ஆரம்பமாகிய.
இவ் எதிர்ப்பு பேரணியானது கல்லடி பாலத்தின் கீழ் உள்ள மைதானத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு கல்லடி பாலத்தின் ஊடாகச் சென்று பாலத்தில் நின்று எதிர்ப்பினை வெளிப்படுத்தி மீண்டும் பழைய பாலத்தின் ஊடாக சென்று மைதானத்தை வந்தடைந்தது.
இந்த எதிர்ப்பு பேரணியின் போது தமிழர்களுக்கு எதிராக இடம் பெற்ற இனப்படுகொலைகள் மற்றும் அடக்குமுறைகளை வெளிப்படுத்து முகமாக பதாகைகள் ஏந்தப்பட்டிருந்ததுடன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கின்றவர்களை விடுதலை செய்யக்கோரி சிறைக்கூடம் ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டு இந்த எதிர்ப்பு பேரணியின் போது எடுத்துச் செல்லப்பட்டது.
அத்தோடு யாரையும் பாதையில் இடம்பெற்ற ஒரு மாணவியின் படுகொலைக்கு நீதி கோரியும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஒரு காட்சிப்படுத்தப்பட்ட காட்சிக்கூடமும் கொண்டு செல்லப்பட்டது.
அத்தோடு வெள்ளைக் கொடி விவகாரம் என வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு இந்த எதிர்ப்பின் போது காட்சிப்படுத்தப்பட்டதோடு துப்பாக்கிகளை கொண்டு தமிழ் மக்களை அடக்கும் செயற்பாடுகள் சம்பந்தமாகவும் காட்சிகள் வெளிப்படுத்தப்பட்டு இருந்தது.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரது முகக்கவசங்களும் அணிந்து எதிர்ப்பில் ஈடுபட்டனர்
இந்த எதிர்ப்பு பேரணியானது சுமார் ஒரு மணி நேரம் கல்லடி பாலத்தில் இடம்பெற்றதுடன் 200க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த எதிர்ப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த எதிர்ப்பு பேரணியில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சானக்கியன், த.கலையரசன், சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டுத்துடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அரியநேந்திரன், ஸ்ரீநேசன், கோடீஸ்வரன், ஆகியோர் கலந்து கொண்டனர் அத்தோடு உள்ளூராட்சி சபைத் தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சியின் இளைஞரணி, இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments: