இத்தாலியில் இருந்து இலங்கை வந்தவரை இளைஞன் ஒருவர் நெகிழ வைத்த சம்பவம் ஒன்று ஒன்று இடம்பெற்றுள்ளது.
வெலிகம பிரதேசத்தில் தங்கியிருந்த இத்தாலி நாட்டவர் ஒருவர் பணம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பையுடன் தொலைத்துவிட்டு தேடி அலைந்துள்ளார்.
இந்த நிலையில் அதனை கண்டுபிடித்த இலங்கை இளைஞன் மீண்டும் அதனை உரிய சுற்றுலா பயணியிடம் கொண்டு சேர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இலங்கையர்கள் தற்போது கடுமையான நிதி நெலுக்கடியை எதிர்கொண்டுள்ளனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் பையில் இருந்த பொருட்களில் எவ்வித குறைவும் இன்றி என்னிடம் கொண்டு வந்து சேர்க்கப்பட்டுள்ளதனை பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளதென இத்தாலி நாட்டவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், நான் எப்போதும் இலங்கைக்கும் இலங்கையர்கள் மீதும் அதிக அன்பை கொண்டுள்ளேன்.
இவ்வாறான மக்களே இலங்கை வளர்ச்சியடைவதற்கு முன்மாதிரியாக செயற்படுபவர்கள் என இத்தாலி நாட்டவர்கள் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
No comments: