News Just In

2/08/2023 12:32:00 PM

கொழும்பு - மல்வத்த வீதியூடாக புறக்கோட்டை நோக்கி படையெடுக்கும் போராட்டக்காரர்கள்




துறைமுக அதிகார சபையின் ஊழியர்கள் கொழும்பு - மல்வத்த வீதியின் ஊடாக புறக்கோட்டை புகையிரத நிலையத்தை நோக்கி படையெடுத்துள்ளனர்.

புகையிரத நிலைய பகுதியில் போராட்டமொன்றை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்காகவே அவர்கள் அப்பகுதிக்கு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலக பகுதிக்கு செல்லும் வீதிகள் பாதுகாப்பு நிமித்தம் மூடப்பட்டுள்ளன. இதேவேளை கொழும்பு கோட்டை - லோட்டஸ் சுற்றுவட்ட வீதியை பொலிஸார் மூடியுள்ளனர்.

தொழிற்சங்கத்தினர் இணைந்து போராட்டம் நடத்தவுள்ளதாக வெளியான தகவலையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

13ஆவது திருத்தத்திற்கு எதிராக கொழும்பில் இன்றைய தினம் போராட்டம் மேற்கொண்டு வந்த பிக்குமார் அரசாங்கத்திற்கு ஒரு வாரம் காலக்கெடு வழங்கி போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக்கொண்டுள்ளனர்.

ஒரு வாரத்திற்குள் தமக்கு இதற்கான பதில் வழங்கப்பட வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

No comments: