News Just In

1/24/2023 12:24:00 PM

யாழில் பல்கலைக்கழக மாணவியின் அந்தரங்க புகைப்படங்களை பகிர்ந்த மாணவன்!




தனது முன்னாள் காதலியின் அந்தரங்க படங்களை நண்பர்களுடன் பகிர்ந்த மாணவன் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.இம் மாணவன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்பவர் என தெரிய வந்துள்ளது.

குறித்த மாணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கடுமையாக எச்சரிக்கப்பட்ட பின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவிகள் வீதியில் செல்லும் போது சில இளைஞர்கள் பாலியல் சேட்டையில் ஈடுபடுகின்றனர் என்று பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து பொலிஸார் பல்கலைக்கழக சூழலில் கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் யாழ்.பல்கலைக்கழக விடுதியின் முன்பாக நின்ற இருவரை பொலிஸார் பிடித்து அவர்களின் கைபேசிகளை பரிசோதித்துள்ளனர்.இதன் போது பெண் ஒருவரின் அந்தரங்கப் படங்களை நண்பர்களுடன் பகிர்ந்திருந்தமை கண்டறியப்பட்டது.

பொலிஸாரின் விசாரணையில் அது அவரின் முன்னாள் காதலி என்றும் இணையவழி உரையாடலின் போது காதலியின் அந்தரங்க காட்சிகளை பதிவு செய்து வைத்திருந்ததாகவும் காதல் உறவு முறிந்ததும் அந்தக் காட்சிகளை நண்பர்களுடன் பகிர்ந்துள்ளார் எனவும் தெரியவந்தது.

இதையடுத்து கைதான இருவரையும் கடுமையாக எச்சரித்ததுடன் அந்தப் படங்களை அழிக்க வைத்த பின் பிணையில் செல்ல அனுமதித்தனர்.

No comments: