உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைவாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈட்டை வழங்கத் தவறினால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஐவரின் சொத்துக்கள் முடக்கப்படலாம் என்று சிரேஷ்ட சட்டத்தரணி காமினி பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஈஸ்டர் தாக்குதலைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியது.
அந்தத் தீர்ப்பின்படி, மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஐவர் 31 கோடி ரூபாவை பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடாக வழங்க வேண்டும்.
இதனை வழங்கத் தவறினால் இந்த ஐவரின் சொத்துக்கள், சம்பளம், ஓய்வூதியம் போன்றவை முடக்கப்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்தத் தண்டனைக்கு மேலதிகமாக சிறைத்தண்டனையும் வழங்க முடியும் என்று சிரேஷ்ட சட்டத்தரணி யூ.ஆர்.டி.சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: