
இலங்கையின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு அரச சேவையில் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டித்தெரிவு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் நாளை (05) காலை 9 மணி முதல் 19ஆம் திகதி இரவு 9 மணி வரை ஒன்லைனில் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச சேவையில் இல்லாத பட்டதாரிகளிடமிருந்தும் (ஆண், பெண் இருபாலாரும்) இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதற்கான இணையவழி முறைமை பெப்ரவரி 20 ஆம் திகதி முற்பகல் 9.00 மணிக்கு ஆரம்பமாகி, மார்ச் 05 ஆம் திகதி முற்பகல் 9.00 மணியுடன் நிறைவடையும்.
மேலதிக விபரங்களை இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இல் வெளியிடப்பட்டுள்ளன.
இணையத்தளத்தில் உள்ள “Our Services” பிரிவின் கீழ் “Online Applications – Recruitment Exams/ E.B. Exams” ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.
No comments: