க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெறும் நேரத்தில் மின்வெட்டு இடம்பெறாது என அதிகாரிகள் அறிவித்துள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை நடைபெறும் நேரத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர, இலங்கை மின்சார சபையிடம் கோரியுள்ளார்.
இந்தக் கோரிக்கைக்கு அமைவாகவே மின் துண்டிப்பினை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இந்த மாதம் 23ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரையில் நடைபெறள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: