News Just In

1/31/2023 09:53:00 AM

வடக்கு, கிழக்கில் தமிழர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அழைப்பு!



இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழர்களுக்கு கரிநாளாக அனுஷ்டிக்கும் வகையில் வடக்கில் ஆரம்பமாகவுள்ள எழுச்சி பேரணியில் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் தேசியத்தின் பால் அனைவரையும் ஒன்றிணையுமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் மட்டக்களப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நேற்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் விஜயகுமார், எதிர்வரும் இலங்கையின் சுதந்திர தினம் எங்களுக்கான சுதந்திர தினம் அல்ல. அது கரிநாள் என குறிப்பிட்டுள்ளார்.

No comments: