News Just In

1/08/2023 04:39:00 PM

பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு கனடா 817 மில்லியன் இலங்கை ரூபாய்களை இலங்கைக்கு வழங்குகிறது.




- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இலங்கையில் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் முகமாக கனடா 3 மில்லியன் டொலர்களை (ஏறத்தாழ 817 மில்லியன் இலங்கை ரூபாய்கள்) வழங்குவதாக இலங்கையிலுள்ள கனடா உயர்ஸ்தானீராலயம் அறிவித்தள்ளது.

கொழும்பிலுள்ள கனடா உயர்ஸ்தானீராலயத்தின் அரசியல் விவகார அதிகாரி இந்திராணி ஜெயவர்த்தனவினால் ஞாயிறன்று 07.01.2023 அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. இலங்கை ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்கங்களின் (ஐகுசுஊ) மனிதாபிமான முறையீடுகளுக்கு பதிலளிக்கும் வகையில், இலங்கையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு கனடா இந்தத் தொகை நிதியை வழங்குகிறது.

இந்த அவசரகால உணவு உதவி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து சேவைகள், பாதுகாப்பான நீர் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளை மிகவும் தேவைப்படுபவர்களுக்கு வழங்குவதற்குப் பயன்படும்.

மேலும், இலங்கையின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்களைக் கொள்வனவு செய்தல் உட்பட இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவுவதற்கும் தொடர்ந்து சர்வதேச உதவித் திட்டங்களை கனடா முன்னெடுத்துள்ளது.

இந்த இக்கட்டான காலங்களில் அனைத்து இலங்கையர்களுடனும் கனடா தொடர்ந்து நிற்கிறது மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளமான இலங்கையை ஆதரிப்பதில் கனடா உறுதியாக உள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: