News Just In

10/06/2022 02:51:00 PM

GSP+ சலுகையை இடைநிறுத்துவதற்கான தீர்மானத்தை ஐரோப்பிய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது – விஜயதாச ராஜபக்ஷ





ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள GSP+ சலுகையை இடைநிறுத்துவதற்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதற்கு 500க்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர், எனினும் இந்த பிரேரணை இதுவரை அமுல்படுத்தப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த பிரேரணையை நடைமுறைப்படுத்தினால் இலங்கையின் ஆடைத் தொழிலில் 6 தொடக்கம் 7 ​​இலட்சத்திற்கும் அதிகமானோர் வேலையிழக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கை தொடர்பில் ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாகவும் முடிவுகள் ஆபத்தானதாக இருக்கலாம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: