News Just In

10/06/2022 01:38:00 PM

ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கான ஆதரவில் வீழ்ச்சி?




ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கான ஆதரவு வீழ்ச்சியடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இன்று (06.10.2022) இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

இந்த தீர்மானம் தொடர்பில் இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகள் மிகவும் சொற்ப எண்ணிக்கையிலானவை என தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய தினம் இலங்கைக்கு ஆதரவாக ஐந்து முதல் பத்து நாடுகள் மட்டும் வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த 2012ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு 15 நாடுகள் ஆதரவாக வாக்களிதிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி சீ.ஏ.சந்திரப்பெரும இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டில் 12 வாக்குகளும் கடந்த 2021ஆம் ஆண்டில் 11 வாக்குகளும் கிடைக்கப் பெற்றதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் நாடுகள்

இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும் நாடுகளின் எண்ணிக்கையும் காலக்கிரமத்தில் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் நாடுகளின் தற்பொழுது பேரவையில் உறுப்புரிமையில் இல்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சாப்ரீ தெரிவித்துள்ளார்.

இம்முறை இலங்கைக்கான ஆதரவு குறைவடைந்துள்ளது என்ற யதார்தத்தை ஒப்புக்கொள்ள வேண்டியிருப்பதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

No comments: