News Just In

9/12/2022 06:05:00 AM

உலகத்தின் அழிவை துல்லியமாக கணித்த பாபா வங்கா! வெளியான புதிய தகவல்!

பூமியில் இரவு நேரம் என்பதே இருக்காது, மக்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக உயிருடன் வாழ்வார்கள் என பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகம் பேரழிவால் முடிவுக்கு வந்துவிடும் எனவும் இன்னும் 3000 ஆண்டுகளுக்கு பின்னர் என்ன நடக்கும் என்பதையும் கணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாபா வங்கா இதுவரை கணித்துள்ள பல சம்பவங்கள் நடந்தேறியுள்ள நிலையில், தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரையின் பெரும்பகுதி இந்த ஆண்டு அதிக மழை மற்றும் வெள்ளத்தை சந்திக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், அதுபோன்றே நடந்துள்ளது.

பெரு நகரங்கள் வறட்சியால் கடும் தண்ணீர் பற்றாக்குறையால் அல்லல்படும் என்றார். தற்போது உலகின் மிகப்பெரிய நகரங்கள் தண்ணீர் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதுடன், தண்ணீர் வீணாக்கும் செயலுக்கு அபராதமும் விதித்துள்ளது.

மேலும், கொரோனா போன்று மிகப்பெரிய தொற்றுநோய் ஒன்று சைபீரியாவில் தோன்றும் எனவும், வெப்பநிலை வீழ்ச்சியால் இந்தியாவில் பஞ்சம் ஏற்படும் எனவும். இதனால் வெட்டுக்கிளி கூட்டம் உள்ளே புகுந்து நாசத்தை ஏற்படுத்தும் எனவும் பாபா வங்கா கணித்துள்ளார். இந்நிலையில், இன்னும் பல ஆண்டுகளுக்கு பின்னர் நடக்கவிருக்கும் சம்பவங்கள் தொடர்பிலும் அவரின் கணிப்புகள் வெளியாகியுள்ளது.

2046 காலகட்டத்திற்கு பின்னர் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு மக்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக உயிருடன் வாழ்வார்கள் எனவும் பாபா வங்கா கணித்துள்ளார்.

2100க்கு பின்னர் பூமியில் இரவு நேரம் என்பதே இருக்காது எனவும், இரவை பகலாக்கும் செயற்கை சூரியன் உருவாக்கப்படும் எனவும் 2023ல் மாறும் என்றும் விண்வெளி வீரர்கள் 2028ல் வீனஸுக்கு பயணம் மேற்கொள்வார்கள் எனவும் பாபா வங்கா கணித்துள்ளார்.

அதேவேளை, உலகம் 5079 காலகட்டத்தில் பேரழிவால் முடிவுக்கு வந்துவிடும் எனவும் கண்பார்வையற்ற பாபா வங்கா கணித்துள்ளார். 12 வயதில் புயல் ஒன்றில் சிக்கி தனது கண்பார்வையை இழந்துள்ள பாபா வங்கா, இதுவரை கணித்துள்ளவற்றில் 85% நிறைவேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: