News Just In

9/11/2022 07:16:00 AM

அரசியல் கைதிகளை பார்வையிடச் செல்லும் உறவுகளுக்கு உணர்வு பூர்வமான வரவேற்பு!

நீண்ட நாட்களுக்கு பின்னர் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்காக கொழும்பு நோக்கி பயணிக்கும் அரசியல் கைதிகளின் உறவுகளை வவுனியாவில் வரவேற்று உணவளித்து வழியனுப்பி வைக்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

பல வருடங்களாக உறவுகளை சந்திக்காமல் சிறையில் வாடும் வடமாகாணத்தை சேர்ந்த அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த அரசியல் கைதிகளின் உறவுகளுக்கு அவர்களின் பயணத்திற்கு ஆதரவளித்து உதவும் பொருட்டு வவுனியாவில் தமிழ் விருட்சம் அமைப்பின் ஏற்பாட்டில் மாலை நேர தேநீர் உபசாரமும் இரவு உணவும் வழங்கி வழியனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

“உறவுகளுக்கு கரம் கொடுத்து உயிர்ப்புடன் சிறை மீட்போம்” எனும் தொனிப்பொருளில் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒழுங்குபடுத்தலில் இன்று (10-09-2022) மாலை 6.00 மணியளவில் வவுனியா கந்தசுவாமி கோவிலிற்கு வருகைதந்த அரசியல் கைதிகளின் உறவுகளை வரவேற்று சிறப்பு வழிபாடுகளுடன் உபசரித்து வழியனுப்பும் நிகழ்வில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் (கண்ணன்) மற்றும் வவுனியா கந்தசுவாமி கோவில் தர்மகர்த்தா சபை செயலாளர் பா.சுந்தர்ராஜன் (குமார்) உள்ளிட்ட சமூக ஆர்வலர்களும் சில ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.

வருகை தந்த அரசியல் கைதிகளின் உறவுகள் தமக்கு வவுனியாவில் வழங்கப்பட்ட வரவேற்பும் வழிபாடுகளும் மனத்திருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தமது உறவுகளின் சிறைமீட்கும் பணத்திற்கும் நம்பிக்கை ஊட்டியுள்ளதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: