News Just In

6/04/2022 07:03:00 AM

நாடு பூராகவும் ஒரு இலட்சம் பலாமரக்கன்றுகள் நடும் நிகழ்வு!

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சுற்றாடல் அமைச்சின் வளாகத்தில் ஒரு இலட்சம் பலா மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம் நேற்று(03) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இவ்வேலைத்திட்டத்தை அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆரம்பித்து வைத்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக உணவுத்தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் முன்னோடி திட்டமாக பலாமரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டத்தை ஊக்குவிப்பதன் மூலம் எதிர்கால உணவு நெருக்கடியை ஓரளவாவது இதன்மூலம் நிவர்த்திக்க முடியுமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்பாக அந்தவகையில் கிழக்கு மாகாணத்தில் பயிரிடப்படாத தரிசு நிலங்கள் பெருமளவில் இருப்பதாகவும் அவற்றை மரம் நடுகை திட்டத்திற்கு பயன்படுத்த முடியுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இது தொடர்பாக நேற்று அமைச்சர்கள் மட்டத்திலும் இந்த விடயம் கலந்துரையாடப்பட்டு இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான பொறுப்பு எமக்கு தரப்பட்டுள்ளது. எனவே கிழக்கு மாகாணத்தில் முன்னோடி வேலைத்திட்டமாக உணவுப்பயிர்களை பயிரிடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை அரசாங்க அதிபர்களுடனும் இது தொடர்பில் கலந்துரையாடப்படுள்ளதாகவும் சுற்றாடல் அமைச்சின் அதிகாரிகள், ஊழியர்கள் இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் அனில் ஜெயசிங்க மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்

No comments: