News Just In

6/04/2022 06:56:00 AM

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தகவல்: வெளியான புதிய அறிவிப்பு!

கொரிய வேலைகளுக்கு தகுதி பெற்றுள்ள இலங்கையர்கள் 5,800 பேரை அடுத்த ஆறு மாதங்களுக்குள் கொரியா பெற்றுக் கொள்ள உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கொரிய மனிதவளத் திணைக்களத்தின் பணிப்பாளரும் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியுமான லீ சூ சுல் அவர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போது உறுதியளிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அடுத்த வாரத்தில் இருந்து ஒவ்வொரு வாரமும் 200 இலங்கைப் பணியாளர்கள் கொரியாவுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும், அதன் பின்னர் வாரத்திற்கு இரண்டு விமானங்களாக அதிகரிக்கப்படும் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

மேலும், கொரிய தொழில் வாய்ப்புகளில் அதிகமானவற்றை இலங்கைக்கு வழங்குமாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார விடுத்த கோரிக்கையும் கொரிய மனிதவளத் திணைக்களத்தின் இலங்கை வதிவிடப் பிரதிநிதியிடம் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளது.

No comments: