News Just In

6/04/2022 06:29:00 AM

இரண்டு வேளை உணவு ஒருவேளையாக கூட மாறலாம் - நெருக்கடி குறித்து ரணில் கடும் எச்சரிக்கை!


எதிர்காலத்தில் இந்த நாட்டில் பலர் இரண்டு வேளை உணவையே ஈடுசெய்ய வேண்டிய நிலை ஏற்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவும் உக்ரைனும் நடத்தும் போரினால் நாட்டின் பொருளாதார நெருக்கடி மேலும் நெருக்கடிக்குள் தள்ளப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு அறக்கட்டளை நிறுவனத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியின் தாக்கம் இப்போதுதான் ஆரம்பமாகிவிட்டது என்று கூறிய அவர், உக்ரைன்-ரஷ்யா போரின் முழு தாக்கத்தை இலங்கை இன்னும் அனுபவிக்கவில்லை என்றும் கூறினார்.

செப்டெம்ப
ர் மாதத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் எனவும், இதன் தாக்கம் 2024ஆம் ஆண்டு வரை இலங்கையில் நீடிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகளவில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடிக்கு மேலதிகமாக யால மற்றும் மஹா பருவங்களில் பயிர்களை பயிரிடுவதில் தோல்வியடைந்துள்ளதாகவும் அதனால் இந்நாட்டு மக்கள் ஒரு நாள் மட்டுமே உண்ண வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: