News Just In

6/14/2022 06:17:00 AM

எதிர்வரும் நாட்களில் டீசல் மற்றும் பெற்றோல் தட்டுப்பாடு அதிகரிக்கும் நிலை!

எதிர்வரும் நாட்களில் டீசல் மற்றும் பெற்றோல் தட்டுப்பாடு அதிகரிக்கும் என பெற்றோலிய கூட்டுத்தாபன  உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, நாட்டில் எரிபொருள் வரிசைகள் மேலும் நீடிக்கும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நேற்றைய நிலவரப்படி 20,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 10,000 மெட்ரிக் தொன் பெற்றோல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் சுமார் 350 மெற்றிக் தொன் பெற்றோல் மற்றும் 800 மெற்றிக் தொன் டீசல் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஆனால் அந்த அளவுகள் அன்றாட தேவைகளுக்கு போதுமானதாக இல்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய கடனுதவியுடன் 40,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றிச் செல்லும் கப்பல் நாளை (15ஆம் திகதி) இலங்கைக்கு வரவுள்ள நிலையில் ஒரு டீசல் அல்லது பெற்றோல் தாங்கி ஒன்று கூட இலங்கைக்கு திரும்பும் எனத் தெரிவிக்கப்படவில்லை.

இதனிடையே, லிட்ரோ எரிவாயு நிறுவனம் இறக்குமதி செய்த எரிவாயு தாங்கிக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்த முடியாத காரணத்தினால் நேற்று ஆறாவது நாளாக கப்பலின் எரிவாயு தரையிறங்கும் பணி மேற்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments: