மருந்துகளைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு உதவ சுகாதார அமைச்சு அவசர தொலைபேசி இலக்கத்தை அறிவித்துள்ளது.
மருந்துகளை பெற்றுக்கொள்வதில் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள் அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அமைச்சுக்கு அறிவிக்க முடியும் என சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
இதன்படி, மருந்துகளைப் பெறுவது தொடர்பான புகார்கள் மற்றும் சிக்கல்களை 1999 என்ற இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி அறிவிக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.
டொலர் நெருக்கடி காரணமாக இலங்கை தற்போது கடுமையான மருந்துப் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: