எரிபொருள் தட்டுப்பாடு நாளாந்தம் இடம்பெற்று வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெற்றோல் எரிபொருளினைப் பெறுவதற்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சிரமப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேசத்தில் வாகனங்களை கொண்டு அன்றாட தொழில் ஈடுபடும் சாரதிகள் தங்களது வாகனத்திற்கான எரிபொருளினை பெற்றுக் கொள்வதற்கு நாளாந்தம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெறுவதற்காக காலை ஆறு மணி முதல் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுவதுடன், அவ்வாறு காத்திருந்து நிரப்பு நிலையத்திற்குள் நுழையும் போது எரிபொருள் முடிந்துள்ளது என்று கூறுவதாக வாகன சாரதிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேசத்தில் காணப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சிலவற்றில் பெற்றோல் காணப்படுகின்றது. சில நிலையங்களில் டீசல்; மற்றும் மண்ணெண்ணைய் இல்லை. இதனால் மக்கள் நாளாந்தம் சிரமப்படுவதுடன், அன்றாட தொழிலாளர்களின் தொழில் முற்றாக பாதிப்படைந்து காணப்படும் நிலைமை உருவாகியுள்ளது.
எஸ்.எம்.எம்.முர்ஷித்
No comments: