இலங்கையில் 74 வயதுடைய முதியவர் ஒருவர் தற்போது நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு நேற்று தோற்றியுள்ளார்.
நெலுவ - களுபோவிட்டியன பகுதியில் வசிக்கும் கலன் கொடகே சந்திரதாச என்ற வயோதிபரே இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றியவராவார்.
க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என்ற ஆசையின் காரணமாக அவர் விஞ்ஞானம் மற்றும் கணிதம் ஆகிய இரண்டு பாடங்களுக்கு தோற்றியுள்ளார். கற்றது எதுவும் வீணாகாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments: