மின்சாரக் கட்டணம் 30-40% அதிகரிக்கப்படலாம் எனவும் அதிகமாக மின்சாரத்தை பாவிக்கும் நுகர்வோருக்கு மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்பட வேண்டும் என தாம் நம்புவதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் குறைந்த அலகுகளை பாவிக்கும் நுகர்வோரின் கட்டணத்தை அதிகரிக்க விரும்பவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மின்சார சபை தொடர்ச்சியாக விலை திருத்தத்தைக் கோரிய போதிலும், ஒன்பது வருடங்களுக்கு மேலாக கட்டணங்கள் திருத்தப்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவும் சில முன்மொழிவுகளை முன்வைத்துள்ள போதிலும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் அங்கீகரிக்கப்படவில்லை என்றார்.
அதன்படி கருணைக் காலம் வழங்கப்பட்டதன் பின்னர், அமைச்சரவை மற்றும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்தத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் கட்டணங்கள் திருத்தப்பட்டால், கணிசமான அளவு அதிக மின் அலகுகளைப் பயன்படுத்தும் சில ஹோட்டல்கள், தொழிற்சாலைகள் மற்றும் அதிக மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 30-40% மின் கட்டணத்தை அதிகரிக்க முடியும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
No comments: