ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
கிழக்கு மாகாண நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் மாகாண ஆணையாளராக சுபியான் பதவியேற்றுக் கொண்டார். இந்தப் பதவியேற்பு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.
இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான சட்டத்தரணி எம்.பி.எம். சுபியான், மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் உதவி ஆணையாளராக நான்கு ஆண்டுகள் கடமையாற்றிய நிலையில் தற்போது இந்தப் பதவி உயர்வைப் பெற்றுள்ளார்.
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சமூகவியல் (விசேட) துறையில் பட்டப் படிப்பை முடித்த சுபியான், நீதி அமைச்சின் சமுதாயச் சீர்திருத்த திணைக்களத்தில் சமுதாயச் சீர்திருத்த உத்தியோகத்தராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் இலங்கை நிர்வாக சேவைத் தேர்வில் சித்தி பெற்று, அனுராதபுர மாவட்ட தேர்தல்கள் உதவி ஆணையாளராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பின்னர் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் உதவி ஆணையாளராக கடமையாற்றி, பல தேர்தல்களை நேர்த்தியாகவும் சிறப்பாகவும் நடத்தி முடித்தார் என்ற அடிப்படையில் கட்சிகளினாலும் சுயேச்சைக் குழுக்களினாலும் பொதுமக்களாலும் பொது அமைப்புக்களாலும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களினாலும் பாராட்டைப் பெற்றிருந்தார்.
சட்டத்துறையிலும் பங்களிப்பை வழங்கி வரும் சுபியான்;, தற்போது பொது நிர்வாகத் துறையில் முதுகலைப் பட்டப் படிப்பையும் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: