News Just In

4/05/2022 05:12:00 AM

இன்று மின்வெட்டு குறித்த அறிவிப்பு!



இன்று  செவ்வாய்க்கிழமை ( 5) மின்வெட்டை மேற்கொள்வதற்காக இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது.

அதற்கமைய,  செவ்வாய்க்கிழமை 6 மணித்தியாலங்களும், 30 நிமிடங்களுக்கும் மின்துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, ABCDEFGHIJKL ஆகிய வலயங்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 4 மணித்தியாலங்களும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, PQRSTUVW ஆகிய வலயங்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை 4 மணித்தியாலங்களும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரை 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

No comments: