உக்ரைன் போர் தொடர்பிலான காணொளிகப்பிள்ளை நீக்காததற்கு கூகுள் நிறுவனத்திற்கு ரஷ்யா அபராதம் விதித்துள்ளது.
உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் போர் சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. இந்த போரில் இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இருப்பினும் அதில் உக்ரைன் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது உக்ரைனில் நடந்து வரும் போர் தொடர்பிலான காணொளிகளை நீக்குமாறு ரஷ்யா கூகுள் நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இருப்பினும் தற்போது வரையில் கூகுள் நிறுவனம் போர் காணொளிகளை நீக்காததன் காரணமாக சுமார் 10600650.18 ரூபிள் அபராதமாக மாஸ்கோ நீதிமன்றம் விதித்துள்ளது.
No comments: