News Just In

4/22/2022 06:31:00 AM

இந்தியாவிலிலிருந்து இலங்கைக்கு வந்தது மற்றுமொரு டீசல் கப்பல்!

இந்திய அரசாங்கம் அளித்துள்ள கடனுதவியின் கீழ் மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் நேற்று முன்தினம் (20ம் திகதி) இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த டீசல் கையிருப்புடன், இரண்டு மாதங்களுக்குள் கிட்டத்தட்ட 400,000 மெட்ரிக் தொன் பல்வேறு எரிபொருள்கள் இந்திய கடன்களின் கீழ் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

எனினும் இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட போதிலும் நாட்டில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு தொடர்ந்த வண்ணமே உள்ளது.

No comments: