
எதிர்வரும் 4ஆம் திகதி முதல் நாட்டில் மீண்டும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
அடுத்த சில நாட்களில் நாட்டில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நிலைபெறும்.
இதன்படி, எதிர்வரும் 4ஆம் திகதி முதல் நாட்டில் மழை பெய்யும் நிலை அதிகரிக்கும்.
குறிப்பாக, வடக்கு, வட - மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் மழை பெய்யும் நிலை அதிகரிக்கக்கூடும்.
எனவே, வானிலை மாற்றம் தொடர்பான மாற்றங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு வலியுறுத்தப்படுகின்றனர்.
No comments: