News Just In

4/03/2022 12:17:00 PM

மஹிந்த பிறப்பித்த உத்தரவு - மாற்றப்பட்ட மின்சார விநியோக நேரம்!


மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் படும் இன்னல்கள் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கவனம் செலுத்தியதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.மேலும், மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, இன்று திட்டமிடப்பட்ட 6 மணி நேர மின்வெட்டு ஒரு மணி நேரத்திற்கு 40 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.மக்கள் எதிர்நோக்கும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு, உரிய அதிகாரிகளுக்கு பிரதமர் ஏற்கனவே அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். இதன்படி அடுத்த சில நாட்களுக்குள் நாடு படிப்படியாக மீளும் என பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments: