News Just In

4/03/2022 12:23:00 PM

சமூக ஊடகங்கள் முடக்கப்படமைக்கான காரணம் வெளியாகின


பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய சமூக ஊடக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.நாட்டின் முக்கிய சமூக ஊடகங்கள் நேற்று நள்ளிரவு முதல் முடக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனால் பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், வட்ஸ்அப், டுவிட்டர் போன்றவற்றை அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் 
நாடு பூராகவும் இன்று பாரிய மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படவிருந்த நிலையில்இந்தமுடக்கநிலைஅறிவிக்கப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் தலைவர் பதவியில் இருந்து ஓஷத சேனநாயக்க  இராஜினாமா செய்துள்ளார்.

இலங்கையில் சமூக ஊடகங்கள் முழுமையாக முடக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் ராஜினாமா அறிவித்தல் வெளியாகி உள்ளது.

இன்று காலை அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சமூக ஊடக வலையமைப்புகளை அணுகும் அனைத்து இணையத்தளங்களையும் தற்காலிகமாக செயலிழக்கச் செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சு தனது அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் நேற்று தெரிவித்திருந்தார்.

No comments: