News Just In

4/27/2022 06:45:00 AM

அரச சேவைகளின் செலவினங்களைக் கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட சுற்றறிக்கை!

அரச சேவைகளின் செலவினங்களைக் கட்டுப்படுத்த நிதி அமைச்சின் செயலாளர் கே. எம். மகிந்த சிறிவர்தனவால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

விசேட சுற்றறிக்கையை வெளியிட்ட நிதியமைச்சு, அரசின் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் முறையையும் வலியுறுத்தியுள்ளது.

திட்டச் செலவுகள், எரிபொருள் குறைப்பு, தகவல் தொடர்புச் செலவுகள், நலன்புரி மற்றும் நிவாரணச் செலவுகளை இடைநிறுத்துதல், அரச துறை ஆட்சேர்ப்பு போன்ற பல அரச சேவைச் செலவுகளைக் கட்டுப்படுத்தும் சிறப்பு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

குறித்த சுற்றறிக்கை அனைத்து அமைச்சுக்கள், மாகாண சபைகள், மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.







No comments: