News Just In

4/02/2022 06:31:00 AM

அறிவுறுத்தல்களை மீறி வெளிநாட்டு நாணயங்களை மாற்றுபவர்களுக்கு எதிராக தொடர்ந்து ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும்!

அறிவுறுத்தல்களை மீறி வெளிநாட்டு நாணயங்களை மாற்றுபவர்களுக்கு எதிராக தொடர்ந்து ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட நாணய மாற்று நிலையங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, கொழும்பில் அங்கீகாரம் பெற்ற நாணய மாற்று நிறுவனங்கள் இரண்டு மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதத்தை விட அதிக விலைக்கு வெளிநாட்டு நாணங்களை விற்பனை செய்துள்ளமை தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நியச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளை அவர்கள் மீறியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

சுவிஸ் மணி எக்ஸ்சேஞ்ச் பிரைவேட் (கொழும்பு 01 தலைமை அலுவலகம் மற்றும் கொழும்பு 06 கிளை)

Western Money Exchange (Pvt) Ltd கொழும்பு 06 உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் உரிய உத்தரவுகளுக்கு இணங்குமாறு குறித்த நிறுவனங்களுக்கு மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த அங்கீகரிக்கப்பட்ட பணம் மாற்றுபவர்கள் எச்சரிக்கைகளை சரி செய்யத் தவறினால், அவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்களை இலங்கை மத்திய வங்கி இடைநிறுத்தி அல்லது ரத்து செய்யும்.

No comments: