News Just In

4/02/2022 06:17:00 AM

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையின் காரணமாக பதவியிலிருந்து விலகியுள்ள மத்திய வங்கியின் நாணயச் சபையின் உறுப்பினர் சமந்த குமாரசிங்க!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் உறுப்பினர் சமந்த குமாரசிங்க (Samantha Kumarasinghe) பதவியிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தனது பதவி விலகல் கடிதத்தை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆயினும், பதவி விலகல் கடிதத்தை அரச தலைவர் ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

சமந்த குமாரசிங்க நாட்டின் மிகப் பெரிய மூலிகை அழகுசாதனப் பொருட்கள் நிறுவனங்களில் ஒன்றின் உரிமையாளராக காணப்படுகிறார்.

No comments: