இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் ஒரு வேளை சாப்பாட்டுக்கே திணறி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், எரிபொருட்கள் பற்றாக்குறையால் தினமும் 13 மணி நேரம் மின் தடை ஏற்பட்டுள்ளது.அவசரநிலை இதனால், பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டை நேற்று முன்தினம் இரவு முற்றுகையிட்டனர்.
அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து ஆர்பாட்டத்தை செய்து வருகின்றனர்.இந்த நிலையில், அரசுக்கு எதிராக போராட்டங்களும் வலுபெற தொடங்கியுள்ளதால், அங்கு அதிரடியாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அவசர நிலை நேற்று நள்ளிரவு முதல் அவசரநிலைஅமலுக்கு வந்துள்ளது.
No comments: