News Just In

4/02/2022 04:01:00 AM

சபாநாயகர்குழுவை சிறப்பாக நடாத்த பிரித்தானிய பிரமுகர்களுக்கான கூட்டத்தில் சாணக்கியன் ஆலோசனை



சபாநாயகர் குழுவிலுள்ளவர்கள் கட்சி சார்ந்து சிந்திக்காமல், நீதியின் பக்கம் நின்று செயற்படுபவர்களாக இருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆலோசனை வழங்கியுள்ளார்.

சபாநாயகர் குழுவிலுள்ள 12 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமான இரண்டு நாள் செயலமர்வு கொழும்பில் இடம்பெற்றது.

பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் இந்த செயலமர்வு முன்னெடுக்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.

இந்தநிலையில் குறித்த செயலமர்வில் பங்கேற்றிருந்த போதே நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இவ்வாறான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

சபாநாயகர் இல்லாத சந்தர்ப்பங்களில் அவரது ஆசனத்தில் இருப்போர், தாங்கள் அங்கம் வகிக்கும் கட்சி சார்ந்து சிந்திப்பவர்களாக இருக்கக் கூடாது எனவும் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.


No comments: