News Just In

3/03/2022 01:33:00 PM

கிண்ணியா மாகத் நகர் ஹமீதியா விளையாட்டு கழக மைதானத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கள விஜயம்



சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்
திருகோணமலை மாவட்ட கிண்ணியா பிரதேசத்தில் உள்ள மாகத் நகர் ஹமீதியா விளையாட்டு கழக மைதானத்துக்கு திருகோணமலை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கள விஜயம் ஒன்றினை நேற்று (3) மேற்கொண்டிருந்தார்.

மைதான அபிவிருத்திகள்,விளையாட்டு வீரர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இளைஞர்களுடன் கலந்துரையாடப்பட்டது.இவ் விஜயத்தில் கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் நசீர்,கிராம அபிவிருத்தி சங்க தலைவர்,இளைஞர்கள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.



No comments: