News Just In

3/23/2022 06:06:00 AM

ஜனாதிபதி தலைமையில் கூடிய விசேட கூட்டம்! - எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானங்கள்!


இலங்கையில் கடும் பொருளாதர நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஆளும் கட்சியின் விசேட கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (22) பிற்பகல் நடைபெற்றது.

நாட்டின் டொலர் நெருக்கடி உள்ளிட்ட பொருளாதார விவகாரங்கள் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டது. இந்த சந்திப்பு அலரிமாளிகையில் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.கூட்டத்தின் பின்னர், இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,

“அனைவரும் ஒன்றிணைந்து, மக்கள் பிரச்னைகளை விரைவில் தீர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இறுதியில் முடிவு செய்யப்பட்டது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைகளை எல்லாம் நாளை தீர்க்க முடியாது, ஆனால் வரிசையை முடிவுக்கு கொண்டுவர தேவையான பணிகள் விரைவில் செய்யப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் டி.பி ஹேரத் கருத்து வெளியிடுகையில், "எந்தவித பதற்றமும் இல்லை. கலந்துரையாடல் அமைதியாக இருந்தது. நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் திறமையான பங்களிப்பை எங்கள் குழுவினர் பாராட்டினர்." என தெரிவித்துள்ளார்.

No comments: