News Just In

1/26/2022 03:43:00 PM

வாகனம் இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்



வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு வர்த்தகர்கள் மீண்டும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இறக்குமதி நிறுத்தப்பட்டதன் மூலம் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலை இரண்டு, மூன்று மடங்காகவும் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முதன்முறையாக வாகனம் வாங்கும் கனவில் இருந்த மக்கள் தற்போது பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார். நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் இதனைத் தெரிவித்துள்ளார்.

டொலர் பரிவர்த்தனை கட்டுப்பாட்டு நடவடிக்கையாக, அரசாங்கம் வாகன இறக்குமதியை கட்டுப்படுத்தியுள்ளது. அதிகரித்துள்ள டொலர் பற்றாக்குறையால், வாகனங்களை இறக்குமதி செய்வதில்லை என்ற முடிவிற்கும் அரசாங்கம் வந்துள்ளது.

வாகன இறக்குமதி நடவடிக்கை, அரசாங்கத்திற்கு வரி வருவாயை பெற்று தரும் முக்கிய விடயமாக உள்ளதென வாகன இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பயன்படுத்திய வாகனங்களை இரண்டு மூன்று மடங்கு அதிக விலையில் விற்பனை செய்தாலும் அரசாங்கத்திற்கு எவ்வித பயனுமில்லை. இதனால் ஏப்ரல் மாதத்திற்குள் வாகனங்களை இறக்குமதி செய்ய சந்தர்ப்பம் வழங்குமாறு வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments: